ஆசிய விளையாட்டு போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சீமா குமாரி வெண்கலம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் தடகளத்தில் அதிகபட்சமாக 75 பேர் (35 வீரர்கள், 40 வீராங்கனைகள்) பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி இன்று மாலை 5.55 மணிக்கு நடைபெற்றது. இந்தியா சார்பில் சீமா பங்கேற்றார்.
இதில் சிறப்பாக ஓடிய சீமா குமாரி 32.50.05 நொடிகளில் ஓடி மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
பஹ்ரைன் வீராங்கனை தங்கப் பதக்கமும், ஜப்பான் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு 10000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 1 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.