விளையாட்டு

Indonesia Open பேட்மிண்டன்: முதல் சுற்றில் காயத்தால் விலகிய சாத்விக்-சிராக் ஜோடி

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் டாய்-காங் காய் ஜிங் ஜோடி உடன் மோதியது.

முதல் செட்டில் 11-6 என மலேசியா ஜோடி முன்னிலை வகித்த நிலையில், சாத்விக்-சிராக் ஜோடி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து மலேசிய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.