விளையாட்டு

ஹாங்காங் ஓபன்: இறுதிச்சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்தது. இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி இறுதிக்கு முன்னேறியது.

மாலை மலர்

ஹாங்காங்:

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லின் பிங் வெய்-சென் செங் குவான் ஜோடி உடன் மோதியது.

இதில் சாத்விக்-சிராக் ஜோடி முதல் செட்டை 21-19 என போராடி கைப்பற்றியது.

இதில் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய தைவான் ஜோடி அடுத்த இரு செட்களை 21-14, 21-17 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.