பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, பிரான்சின் தோமா ஜுனியர் பபோவ் - கிறிஸ்டோ பபோவ் ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 21-19, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
டென்மார்க் ஓபன் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் முதல் சுற்றிலேயே இந்திய ஜோடி வெளியேறியது.