தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நூர் இஜுதீன்-கோ சே பி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 19-21, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.