சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
அரையிறுதியில் சாதவிக் சிராக் ஜோடி மலேசிய அல்லது இந்தோனேசிய ஜோடியை எதிர்கொள்கிறது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றிலும், லக்ஷயா சென் முதல் சுற்றிலும் தோல்வி அடைந்தனர்.
இதேபோல், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறினர்.