விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

மாலை மலர்

புதுடெல்லி:

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் ஜின்-காங் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-10, 21-17 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் கோ-இசுதின் ஜோடியை எதிர்கொள்கிறது.