விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெண்கள் பிரிவில் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. நாளையுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் நூர் முகமது-டான் வீ கியாங் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி முதல் செட்டை 21-16 என வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுதாரித்து ஆடிய மலேசிய ஜோடி 2வது செட்டை 21-18 என கைப்பற்றியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-11 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

நடப்பு ஆண்டில் இந்த ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 3வது தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றிலும், லக்‌ஷயா சென் முதல் சுற்றிலும் தோல்வி அடைந்தனர்.

இதேபோல், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோரும் தோல்வி அடைந்து வெளியேறினர்.

SCROLL FOR NEXT