ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷாகிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாதவிக்-சிராக் ஜோடி, டென்மார்க்கின் மேட்ஸ் வெஸ்டர்கார்ட்-டேனியல் லுன்கார்ட் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய டென்மார்க் ஜோடி 21-19 என்ற செட் கணக்கில் முதல் செட்டை வென்றது.
அப்போது காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதனால் டென்மார்க் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கனவே பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.