உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் லியாங் வெய்ங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
ஏற்கனவே, பெண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.