சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்வி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் காங் காய் ஜிங்-ஆரோன் டை ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசியா ஜோடி முதல் செட்டை 21-19 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக்-சிராக் ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என கைப்பற்றியது. அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.