விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டன் - ஆடம் பிரிங்கிள் ஜோடி உடன் மோத இருந்தது.

ஆனால் காயம் காரணமாக ஸ்காட்லாந்து ஜோடி போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து, இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஏற்கனவே, கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

SCROLL FOR NEXT