விளையாட்டு

Singapore Open பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்வி-சிராக் ஷெட்டி ஜோடி, அமெரிக்காவின் பிரெஸ்லி ஸ்மித்-சென் ழீ யூ ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க ஜோடி முதல் செட்டை 28-26 என போராடி வென்றது. இதற்கு பதிலடியாக இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.