பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகள் சாரா, மருமகள் சானியா சந்தோக் உடன் தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
விமான பயணத்தின்போது, நடுவானில் தனது மகள் மற்றும் மருமகளுடன் சச்சின் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், சச்சினின் மருமகள் சானியா சந்தோக் அவருக்குப் பந்து வீசிக் கொண்டிருந்த வேளையில், அவரது மகள் சாரா டெண்டுல்கர் பந்தைப் பிடித்து அவுட்டாக்கினார். இந்தத் தருணத்தை அவர்கள் மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
உயரம் எதுவாக இருந்தாலும் மனப்பான்மை மாறக்கூடாது என்ற குறிப்புடன் சச்சின் டெண்டுல்கர் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
விமானத்தில் எடுக்கப்பட்ட இந்த வேடிக்கையான கிரிக்கெட் மற்றும் சச்சினின் பேட்டிங் ஸ்டைலை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.