விளையாட்டு

92.62 மீ தூரம் ஈட்டி எறிந்து அசுர சாதனை படைத்த இலங்கை வீரர் ருமேஷ் பதிரகே

90 மீட்டர் தூரத்திற்கு அதிகமாக எறிந்த ஆசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் ருமேஷ் இடம் பிடித்துள்ளார்.

ஆசியாவிலேயே ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோர் சாதனைப் படைத்து வருகிறார்கள்.

பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் பாரீஸ் ஒலிம்பிக்கில் 92.97 மீ தூரம் எறிந்து சாதனைப் படைத்தார். நீரஜ் சோப்ரா 90.23 மீ தூரம் வரை எறிந்து சாதனைப் படைத்துள்ளார்.

இருவருக்கும் போட்டியாக இலங்கையை சேர்ந்த ருமேஷ் பதிரகே உருவெடுத்துள்ளார். இவர் ரோம் டைமண்ட் லீக்கில் 92.62 மீ தூரம் எறிந்து சாதனைப் படைத்துள்ளார். அர்ஷத் நதீமை விட 35 செ.மீ. குறைவாக வீசியுள்ளார்.

சீன தைபேயைச் சேர்ந்த சயோ-டிசுன் சென் 91.36 மீ தூரம் எறிந்துள்ளார். தற்போது 90 மீ கடந்த எறிந்த 4-வது ஆசிய வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சச்சின் யாதவ் 79.18 மீ தூரமே எறிந்து ஏமாற்றம் அடைந்தார்.