2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது லீக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கால்வலி காரணமாக தோனி இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
மேலும் டெவால்ட் ப்ரெவிஸ் போன்றோரும் அணியில் இல்லை. மிக முக்கியமான இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக களம் இறங்குகிறார் தளபதி ரவீந்திர ஜடேஜா. இதனால் இப்போட்டி சென்னை ரசிகர்களுக்கு மேலும் மனவேதனையை கொடுத்துள்ளது என்றேக் கூறலாம்.
இந்நிலையில் கவுகாத்தியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்மூலம் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.