ஐபிஎல் 2026 தொடரின் 69-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ்வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. ராஜஸ்தான் இப்போட்டியில் தனது வெற்றியை உறுதிசெய்ததன் மூலம் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளும் இத்தொடரில் இருந்து வெளியேறின.