விளையாட்டு

FIDE Candidates | மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் பட்டம் வென்று அசத்திய ஆர் வைஷாலி

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர்

கேண்டிடேட்ஸ் செஸ் தெடரின் மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர் வைஷாலி பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் ரஷியா நாட்டை சேர்ந்த கேத்ரினா லாக்னோவை எதிர்கொண்ட தமிழ் நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி வீழ்த்தினார்.

இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வைஷாலி பெற்றுள்ளார்.

இறுதிச்சுற்றுக்கு முன்னதாக கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாராவுடன் 7.5 புள்ளிகள் பெற்று வைஷாலி சமனில் இருந்தார். இதில் திவ்யா உடனான ஆட்டத்தை பிபிசாரா சமனில் முடித்தார். வைஷாலி தனது இறுதிச்சுற்று போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் லாக்னோவை 8.5/14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

2024-ல் 7.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்ட வைஷாலி, இம்முறை ஒரு புள்ளி முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.