உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் முன்னேறின.
16 அணிகள் பங்கேற்ற ரவுண்ட் ஆப் சுற்று நிறைவடைந்த நிலையில் இந்த சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தன.
காலிறுதி சுற்று போட்டிகள் அமெரிக்காவில் நாளை நள்ளிரவு தொடங்குகிறது.
பாஸ்டன் மைதானத்தில் 9-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் 10-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
மியாமி மைதானத்தில் 11-ம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நார்வே, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
கான்சாஸ் சிட்டி மைதானத்தில் 12-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அர்ஜெண்டினா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.
காலிறுதியில் வெற்றி பெறும் 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும்.
அதன்பின், அரையிறுதியில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடைசிகட்ட பரபரப்புக்குள் நுழைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.