விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

மாலை மலர்

பாரிஸ்:

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.