விளையாட்டு

Australia Open பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் பி.வி.சிந்து, தன்வி சர்மா

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சக நாட்டு வீராங்கனையான இஷாராணி பரூவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 22-20, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா 21-13, 21-15 என்ற செட்கணக்கில் சக நாட்டு வீராங்கனையான மாளவிகா பன்சோதை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி சுற்று ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.