தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய யமாகுச்சி 19-21, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.