விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்ள இருந்தார்.

இதில் ஜப்பான் வீராங்கனை போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதையடுத்து, பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பே உடன் மோதுகிறார்.

முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி காயத்தால் முதல் சுற்றோடு வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.