விளையாட்டு

Singapore Open பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிவி சிந்து 21-9, 21-12 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.