விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷாகிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றைஒயர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் வாங் லிங் சிங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ - துருவ் கபிலா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT