விளையாட்டு

Badminton Asia Championship | முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடைபெறுகிறது.

43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, மலேசியாவின் வோங் லிங் சிங் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 15-21 என இழந்த பி.வி.சிந்து. அடுத்த இரு செட்களில் அதிரடியாக ஆடி 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.