பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறி அசத்தினார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ஹீனா அகேச்சி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-10 என வென்றார். இதற்கு பதிலடியாக ஜப்பான் வீராங்கனை 2வது செட்டை 22-20 என போராடி கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-16 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பிவி சிந்து தென் கொரியாவின் ஆன் சே-யங் உடன் மோதுகிறார்.
கடந்த ஜூலையில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.