UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி புடாபெஸ்டில் நேற்று நடந்தது. இதில் ஆர்சனல் அணி, நடப்பு சாம்பியன் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியுடன் மோதியது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆர்சனல் தரப்பில் கை ஹாவெர்ட்ஸ் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதற்கு பதிலடியாக பிஎஸ்ஜியின் உஸ்மானே டெம்பேலே கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள், கூடுதல் 30 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
இதையடுத்து, சாம்பியனைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் ஆர்சனல் அணியின் எபெரெச்சி எஸே மற்றும் கேப்ரியல் மகலாய்ஸ் ஆகியோர் தங்களது வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறினர். மறுபுறம், பிஎஸ்ஜி வீரர்கள் தங்களது வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினர்.
இதன்மூலம் பெனால்டி ஷூட் சுற்றில் 4-3 என வெற்றி பெற்ற பிஎஸ்ஜி அணி, யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.