பெஜியா:
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது.
ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் பட்டத்தை வெல்வதுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெறுவார்.