விளையாட்டு

ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்தியா

இந்திய வீராங்கனை கிரண் பாஹல் 53.41 நொடிகள் ஓடி 5வது இடம் பிடித்தார்.

ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிராச்சி சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் இன்று மாலை நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பில் பிராச்சி சவுத்ரி, கிரண் பாஹல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெண்கலம் வென்ற பிராச்சி

இந்தியாவின் பிராச்சி சவுத்ரி 53.21 நொடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மற்றொரு வீராங்கனையான கிரண் பாஹல் 53.41 நொடிகள் ஓடி 5வது இடம் பிடித்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு இன்று இது 7-வது பதக்கம் ஆகும். இந்தியா இதுவரை 4 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT