விளையாட்டு

ஒரே ஆண்டில் 3 நிலையிலும் சதம்-நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் புதிய சாதனை

ரோகித் சர்மா 2017-ம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

வெல்லிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் சதம் அடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஆண்டில் 3 வித கிரிக்கெட் போட்டிகளிலும் செஞ்சூரி அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஜனவரி மாதம் இந்தூரில் நடந்த ஒருநாள் போட்டியில் 106 ரன்னும், ஆக்லாந்தில் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்ற 4-வது 20 ஓவர் ஆட்டத்தில் 107 ரன்னும், இன்று வெலிங்டன் டெஸ்டில் 118 ரன்னும் எடுத்தார்.

ரோகித் சர்மா 2017-ம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிலிப்ஸ் அந்த சாதனையை தொட்ட 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

SCROLL FOR NEXT