விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.இதில் பாட்னா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

மாலை மலர்

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

இறுதியில், பாட்னா அணி 52-31 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது பாட்னா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும்.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் 32-24 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீழ்த்தி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.