இலங்கை கிரிக்கெட் வாரியம், வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த பத்திரனா, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஏப்.17 முதல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் இணைவார் என்றும், ஏப்.19 அன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் கொல்கத்தா அணி 3-ல் தோல்வியும், ஒரு போட்டி மழையாலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது கொல்கத்தா. நாளை மறுநாள் சென்னையை எதிர்கொள்கிறது கொல்கத்தா.