ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார் இன்று உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
நிஷாத் குமார் 2 தங்கம்
பாரா ஆசிய விளையாட்டில் நேற்று நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் தங்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில், ஆண்களுக்கான டி47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதில் புதிய சாதனையையும் படைத்துள்ள அவர் 2.04 மீட்டருக்கு உயரம் தாண்டி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீரர் நிஷாத் குமார் இரு தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்தியா மொத்தம் இதுவரை 9 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இதற்குமுன் இரு இந்தியர்கள் ஒரே தொடரில் இரண்டு தங்கம் வென்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் நிஷாத் குமார் 3-வது வீரராக இணைந்துள்ளார்.
டி47 என்பது கைகளின் குறைபாடு கொண்ட தடகள வீரர்களைக் குறிக்கும் வார்த்தையாகும். இந்தப் பிரிவில்தான் நிஷாத் குமார் சாதனை படைத்துள்ளார்.