விளையாட்டு

நியூசிலாந்து வெற்றி: டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரிலிருந்து 4வது அணியாக வெளியேறியது ஸ்காட்லாந்து!

இந்தியா ஏ குரூப் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்து 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து 4வது அணியாக வெளியேறியது ஸ்காட்லாந்து.

இங்கிலாந்தின் பிரிஸ்டலில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி, 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றிப் பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் ஸ்காட்லாந்து தற்போது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. முன்னதாக அயர்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் வெளியேறின.

இந்தியா இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2-ல் வெற்றிப்பெற்று ஏ அணியின் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஸ்காட்லாந்து பி அணியில் இடம்பெற்றுள்ளன.