விளையாட்டு

நியூசிலாந்து ஒருநாள் தொடர்: 2 நாளில் இந்திய அணி அறிவிப்பு- ஹர்சித் ரானா திரும்ப வாய்ப்பு

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

இந்திய அணி தேர்வு

20 ஓவர் தொடர் வருகிற 22-ந் தேதி கிறிஸ்ட் சர்ச்சில் தொடங்குவது நவம்பர் 1-ந் தேதி வரை 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒருநாள் தொடர் நவம்பர் 4 முதல் 15 வரை நடைபெறுகிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த 2 அல்லது 3 தினங்களில் அணி தேர்வு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் தேவஜித் சைக்யா தெரிவித்துள்ளார்.

ஹர்சித் ரானா

காயம் அடைந்த வேகப்பந்து வீரர் ஹர்சித் ரானா அணிக்கு திரும்புவாரா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறுவதை கிரிக்கெட் வாரியம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது.

பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ஹர்சித் ரானா 8-வது வரிசைக்கு பொருத்தமானவர் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் காரணமாக 24 வயதான ஹர்சித் ரானா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இடம் பெற வில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ஆடவில்லை.

SCROLL FOR NEXT