இந்திய கிரிக்கெட் அணி அக்டோபரில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தனது பயணத்தை அக்டோபர் இறுதியில் டி20 தொடருடன் தொடங்குகிறது. அதன்பின், ஒருநாள் தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரை பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெறுகிறது.
2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக கிரிக்கெட்டின் வலுவான அணிகளாகத் திகழும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இந்த சுற்றுப்பயணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 ஆண்டுக்கு பின் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.