விளையாட்டு

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்

இந்தியா-ஜப்பான் மோதும் ஆசிய டி20 கிரிக்கெட் பயிற்சி போட்டி செப்டம்பர் 22 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான ஆசிய டி-20 கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனம் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது.

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி

இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. செப்டம்பர் 24 முதல் 26 வரையில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

அதையடுத்து நடைபெறும் காலிறுதி போட்டியில், நேரடியாக தகுதி பெற்றுள்ள நடப்பு ஆசிய சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜப்பான் அணிக்கு எதிராக செப்டம்பர் 22 அன்று ஒரு சிறப்பு போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியை ஜப்பானுக்கு அழைத்து வருவது, ஜப்பானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுறையாக அமையும் என்று கூறினார்.

இந்திய ஒளிபரப்பு உரிமை

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை ஃபேன் கோட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோன்று இந்தியாவில் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

உலகளாவிய ஒளிபரப்பு உரிமை

இந்த நிலையில், ஆசிய டி20 போட்டிக்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை பெறுவதில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான், யூடியூப் மற்றும் DAZN ஆகிய முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதற்கான ஏலங்கள் ஒரே நாளில் திறக்கப்படுவதால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT