விளையாட்டு

தோஹா டைமண்ட் லீக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம்

அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 85.99 மீட்டருடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

தோஹா டைமண்ட் லீக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நான்காவது இடத்தைப் பிடித்தார். 28 வயதான சோப்ரா தனது மூன்றாவது முயற்சியில் 85.69 மீட்டர் தூரம் எறிந்து, இறுதியில் நான்காவது இடத்தைப் பெற்றார்.

வளர்ந்து வரும் இலங்கை வீரரும் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருப்பவருமான ரூமேஷ் தரங்க பத்திரகே 88.68 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார்.

ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.38 மீட்டருடன் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 85.99 மீட்டருடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இருப்பினும், வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்திய தடகள சம்மேளனம் (AFI) நிர்ணயித்திருந்த 82.61 மீட்டர் தகுதித் தூரத்தை சோப்ரா கடந்து சாதகமான நிலையை எட்டினார்.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான 32 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.