நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
விளையாட்டு

காமன்வெல்த் போட்டிக்கான 32 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு: நீரஜ் சோப்ரா இடம் பிடித்தார்

காமன்வெல்த் போட்டிக்கான 32 பேர் கொண்ட அணி இந்திய தடகள பெடரேசன் அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் உள்ள நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 2-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்திய தடகள பெடரேசனின் இறுதித் தேர்வு கமிட்டி குழு நடைபெற்றது. இதன்பின் 32 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ரா

இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2025ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பின் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. முதுகு வலி (Back Injury) காரணமாக அவதிப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது அந்த வலி சரியாகிவிட்டது. இன்னும் 10 நாட்களில் போட்டிக்கு தயாராகி விடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்குள் இரண்டு மூன்று போட்டிகளில் பங்கேற்று உடற்தகுதியை நிரூபிப்பேன் என்று நீர்ஜ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு பெடரேசன் அனுமதி அளித்துள்ளது.

குரிந்தர்வீர் சிங் (100மீ ஓட்டப்பந்தயம்), அனிமேஷ் குஜுர் (200மீ), குல்வீர் சிங் (5000மீ மற்றும் 10000மீ), தேஜஸ்வின் ஷங்கர் (டெக்லத்தான் மற்றும் உயரம் தாண்டுதல்), பருல் சவுத்ரி (3000மீ ஸ்டீபிள்சேஸ் மற்றும் ரேஸ்வால்கர் பிரியங்கா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.