விளையாட்டு

டைமண்ட் லீக் பைனல் - 2வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்தது.இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.

வாஷிங்டன்:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

இதில் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் முதல் இடம் பிடித்தார். பின்லாந்து வீரர் ஹாலெண்டர் 3ம் இடம் பிடித்தார்.

SCROLL FOR NEXT