விளையாட்டு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நவ்தீப்

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.முதல் இடம் பிடித்த வீரர் பெயிட் சட்ஹித் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மாலை மலர்

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.

இதில் இந்திய வீரர் நவ்தீப் சிங் பங்கேற்றார். இப்போட்டியில் ஈரான் வீரர்  47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் நவ்தீப் 47.32 மீட்டர் தூரம் வீசி 2ம் இடம் பிடித்தார்.

ஆனால், முதல் இடம் பிடித்த வீரர் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், நவ்தீப் தங்கப் பதக்கம் வென்றார் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.