தேசிய ஜூனியர் தடகளம்
விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகளம்: குண்டு எறிதல், போல்வால்டில் புதிய சாதனை- தமிழகத்துக்கு 3 தங்கம்

ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜிதின் அர்ஜூனன் தங்கம் வென்றார்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

2 புதிய சாதனை

2-வது நாளான நேற்று 2 புதிய தேசிய சாதனை நிகழ்த்தப்பட்டது. தமிழகத்துக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் குண்டு எறிதலில் தமிழக வீரர் தரனேஷ் 17.86 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.

பெண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட போல்வால்ட்டில் ராஜஸ்தான் வீராங்கனை சுகி பிரதா 3.91 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜிதின், சாதனா

ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜிதின் அர்ஜூனன் 7.64 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை சாதனா ரவி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT