தேசிய இளையோர் தடகளம்
விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணி 26 பதக்கத்துடன் முன்னிலை

உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை 1.52 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

26 பதக்கம்

நேற்றைய 3-வது நாளில் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட பிரிவு உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் அம்ப்ரீஷ் 2.18 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். அதோடு புதிய போட்டி சாதனையையும் சமன் செய்தார்.

அவர் 2014-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையை சமன் செய்தார். பெண்களுக்கான 16 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை 1.52 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

இதே வயது பிரிவில் நடைபெற்ற 80 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வர்ஷிகா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 11.61 வினாடியில் கடந்தார்.

இதேபோல தமிழகத்தை சேர்ந்த கிரிபால் கார்த்திக், கானா ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கமும், ராஜஸ்ரீ வெண்கல பதக்கமும் பெற்றனர்.

3-வது நாள் போட்டி முடிவில் தமிழக அணி 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் ஆக மொத்தம் 26 பதக்கத்துடன் 181 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக அரியானா 166 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. நாளை வரை போட்டி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT