2026 ஐபிஎல் தொடரில் 24வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்தவு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 201 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் கிவிண்டன் டி காக் சதமும், நமன் தீர் அரைசதமும் விளாசினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்திப் ஷிங் 3 விக்கெட்டுகளும், மார்க்கோ ஜான்சன், ஷஷாங் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் இப்போட்டியிலும் வெற்றியைப் பெற தீவிரமாக செயல்படும்.
மறுபுறம் மும்பை நான்கில் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியை வெற்றிப்பெற முயற்சிக்கும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.