ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 123 ரன்களும், வில் ஜாக்ஸ் 46 ரன்களும் அடித்தனர். ஹைதராபாத் தரப்பில் பிரஃபுல் ஹிங்கே 2 விக்கெட்டுகளும், மலிங்கா, ஹுசைன், ரெட்டி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் அணி 244 ரன்களை இலக்காக கொண்டு விளையாட உள்ளது. மும்பை இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் தோற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வரும்.
சன்ரைசர்ஸ் 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் வலுவான நிலையில் உள்ளது.