விளையாட்டு

விமான பயணிகளை கவர்ந்த டோனி- வீடியோ வைரல்

தனது இருக்கைக்கு சென்று அமராமல் ரசிகர்களுடன் சில நிமிடங்கள் உரையாடுகிறார். “மகி தருணம்” என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட, அது இதுவரை 44 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.

கிரிக்கெட் வீரரான டோனி, விளையாட்டு மைதானத்திற்கு வெளியே எளிமையான செயல்களால் பல நேரங்களில் அனைவரின் மனங்களையும் கவர்ந்திருக்கிறார்.

சமீபத்தில் விமான பயணத்தில் ரசிகர்களையும், சக பயணிகளையும் அவர் எளிதில் ஈர்த்தார். ஒரு பயணி, தான் பயணிக்கும் விமானத்தில் டோனி, குடும்பத்தினருடன் ஏறுவதை அறிந்தபோது மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். அதை படம் பிடிக்க ஆரம்பித்தார்.

வீடியோவில், டோனி கருப்பு பேன்ட் மற்றும் பழுப்பு நிற டீசர்ட்டில், மகளை முன்னே நடக்கவிட்டு மனைவியுடன் விமான படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். உள்ளே நுழைந்ததும் விமான பயணிகளை பார்த்து அவர் கை அசைக்கிறார். அவரது ரசிகர்கள் சிலர் கைகுலுக்க கையை நீட்டியதும் அவர்களுடன் ஹை-பை செய்கிறார். உடனே தனது இருக்கைக்கு சென்று அமராமல் ரசிகர்களுடன் சில நிமிடங்கள் உரையாடுகிறார்.

அப்போது அவர் கையில் தண்ணீர் பாட்டிலும், முதுகில் தோள் பையுடன் எளிமையாக, யதார்த்தமாக இருப்பது அனைவரையும் கவர்ந்தது. விமான பயணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மகி தருணம்" என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட, அது இதுவரை 44 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. சுமார் 4 லட்சம் பேர் 'லைக்' தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT