விளையாட்டு

மெஸ்சியின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

மெஸ்சியின் தந்தை ஜார்ஜ் மெஸ்சி உடல் நிலை குறித்து பரபரப்பான தகவல் பரவியது.

அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஆட்டம் முடிந்ததும் தனது பனியனால் கண்ணீரை துடைத்தபடி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,'நான் சில கடினமான நாட்களை கடந்து வந்தேன். அது கால்பந்து தொடர்பானது கிடையாது. அதனை நினைத்ததால் தான் கண்ணீர் வந்தது' என்றார். இதற்கிடையே அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்சி உடல் நிலை குறித்து பரபரப்பான தகவல் பரவியது.

இந்த நிலையில் மெஸ்சி கண்ணீர் சிந்தியதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்சி (வயது 68) உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை மெஸ்சியின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். ஆனால் அவருக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.