விளையாட்டு

ஆசிய விளையாட்டு: முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் சாத்விக் சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது.

ஜப்பானில் உள்ள நகோயாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், பேட்மிண்டனில் இந்தியாவின் இரட்டையரான சாத்விக்-சிராக் ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடி தாய்லாந்தின் பக்கபொன் தீரரட்சாகுல்-பீராட்சி சுக்பன் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து ஜோடி 21-12, 19-21, 14-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதன்மூலம் நடப்பு சாம்பியனான சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது.

SCROLL FOR NEXT