விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஒரே வாரத்தில் முதலிடத்தை இழந்த யான்சென்

தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் 9 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (881 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித் துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் 20 புள்ளிகளை கூடுதலாக சேர்த்த அவர் அரியணையில் ஏறி இருக்கிறார்.

கடந்த வாரம் 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக முதலிடத்துக்கு வந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சென் (875 புள்ளி) ஒரே வாரத்தில் முதலிடத்தை இழந்து 2-வது இடத்துக்கு இறங்கினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்ததால் அவருக்கு இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதே டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்த தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் 9 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT